தமிழ்நாடு
மதுரை JAM மகளிர் அரபிக் கல்லூரி முப்பெரும் விழா.
மதுரை JAM மகளிர் அரபிக் கல்லூரி மற்றும் JAM சமூக நல அறக்கட்டளை சார்பாக மதுரை திருமங்கலம் பைபாஸ், வலையபட்டி டோல்கேட் அருகில் சௌதாம்மா நினைவு திடலில் முத்தான முப்பெரும் விழாவான – எட்டாம் ஆண்டு நிறைவு விழா, முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, பள்ளிவாசல் மற்றும் மதரஸா புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் JAM கல்வி குழுமத்தின் நிறுவனர் & தாளாளர் பள்ளப்பட்டி. மௌலானா மௌலவி S.M.முஹம்மது அல்தாப் அலி உலவி…
வாணியம்பாடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிக்க முயற்சி.
கூச்சலிட்டதால் முகம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கி விட்டு மர்ம நபர் தப்பி ஓட்டம். வாணியம்பாடி, ஆக.5- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அம்பூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜாய்சி. இவரது மகன் மற்றும் மகள் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜாய்சி நேற்று காலை வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மருமநபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்து மருத்துவர் இல்லையா சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறியுள்ளார். வீட்டில் தனியாக இருந்த ஜாய்சி மருத்துவர் யாரும் இல்லை என்று…
வாணியம்பாடி அருகே ஆடிப்பெருக்கு விழாவின்போது பாலாறு பாசனை கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நடை பாதை பாலம் உடைந்து பக்தர்கள் படுபடுகாயம்.
வாணியம்பாடி, ஆக.4- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி கிராமத்தில்ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு பக்தர்கள் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலாற்றில் நீராடிய பின்னர் பாசன கால்வாய் மீது அமைக்கப்பட்டு இருந்த நடை பாதை தற்காலிக பாலம் உடைந்து பக்தர்கள் சிலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து கோயில் நிர்வாகம் சேதம் அடைந்த இடத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு மன் கொட்டி சாலையை சரி…
விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 473 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
விழுப்புரம் ஆக.05- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் (04.08.2025) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு மனுக்கள் மீது உடனடி தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 473 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர்…
தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சி..
மதுரையில் டைடல் பார்க், தூத்துக்குடியில் நியோ டைடல் பார்க், விருதுநகரில் PM மித்ரா பார்க், நெல்லையில் டாடா எரிசக்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தென் தமிழ்நாடு இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம் கலைஞரின் கனவு நனவாகிறது” தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பை மீட்டு தர சொல்லி கோரிக்கை மனு.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் அறிவுறுத்தலின்படி திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணாபுரத்திற்கு உட்பட்ட ஜம்புளியம்பட்டி ஏழாவது வார்டு பகுதியில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ஆஞ்சநேயர் போன்ற தெய்வங்கள் கொண்ட பழமை வாய்ந்த திருக்கோயில் உள்ளது இந்த திருக்கோயிலின் பாதையையும் இடத்தையும் அப்பகுதியில் உள்ள சில நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பினை அகற்றி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் விதமாக சுகாதார வளாகம் கட்டித்…
திண்டுக்கல் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஆறுமுகம் மங்கலம் மென் பொறியாளர் கவின்குமார் சாதிய ஆவண படுகொலையை கண்டித்தும் சாதி ஆவண படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக தனி சட்டம் இயற்றிட வலியுறுத்தியும் ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆதி தமிழர் சமூக நீதிப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், குருநாதன், செல்வராசன் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாவட்டம் கணியூரில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது.
மடத்துக்குளம் அடுத்துள்ள கணியூர் ஓம் முருகா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. முகாமில் மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இம்முகாமில் காரத்தொழுவு , ஜோத்தம்பட்டி ஊராட்சி பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக வீட்டுமனை பட்டா , மகளிர் உரிமை தொகை , புதிய ரேசன் அட்டை , முதியோர் உதவித்தொகை, கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான உதவித்தொகை ஆகியவைகளை பெறுவதற்காக மனுக்களை வழங்கினர்….
கோவை சிவானந்தா குடியிருப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாம்.
மாநகர் மாவட்ட திமுக, தெற்கு சட்டமன்றத் தொகுதி, சிவானந்தா குடியிருப்பு வியாச மந்திர் திருமணமண்டபத்தில் நடைபெற்ற, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், வார்டு எண் 68 க்கான, மாண்புமிகு.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், “எல்லோர்க்கும் எல்லாம்” 13+ அரசுத் துறைகள்,43+ சேவைகள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள்,மருத்துவ முகாம்களுடன், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில்” மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ., அவர்கள் பங்கேற்று,பார்வையிட்டார். சிவானந்தா பகுதி திமுக பொறுப்பாளர் டெம்போ சிவா ,மத்திய…
அகில இந்திய மக்கள் உரிமை கழகத்தின் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மதுரை யூ. சி. பள்ளியில் அகில இந்திய மக்கள் நல கழகத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் நடைபெறுகிறது. இந்த விழா அகில இந்திய மக்கள் நல கழகத்தின் தலைவர் டாக்டர். சிவக்குமார் தலைமையில் மாநில,மாவட்ட நிர்வாகிகள் மாநாடு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கிறார்கள்.
