இதழ்கள்
பேரூராட்சி அதிகாரிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் தெருவிளக்குகள் அமைத்து தராமல் கடந்த நான்கரை ஆண்டுகளாக அலட்சியம் காட்டி வரும் அதிகாரிகளை கண்டித்து, 25-க்கும் மேற்பட்ட பேரூராட்சி மன்றத் தலைவர்கள் இன்று (22.08.2025) நாகர்கோவிலில் உள்ள பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொது நிதி அல்லது சிறப்பு நிதியிலோ தெருவிளக்குகளுக்கான நிதி ஒதுக்கப்படாமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கில் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள், உடனடி நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்ட செய்தியாளர்…
ரயில்வே நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, அடிப்படை வசதிகள் – கோட்ட மேலாளரிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை.
ஆக் 22, கன்னியாகுமரி திருவனந்தபுரம்: குமரி மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரயில் நிறுத்தங்கள், ரயில்களின் நீட்டிப்பு, ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள், ரயில்வே உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளரிடம் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கோரிக்கை வைத்தார். புதிய கோட்ட மேலாளரை சந்திப்பு திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளராக புதியதாக பொறுப்பேற்ற திவ்யகாந்த் சந்திராகர் அவர்களை மரியாதை நிமித்தமாக விஜய் வசந்த் சந்தித்தார். மக்கள் நலனுக்கான கோரிக்கைகள் இந்த…
கன்னியாகுமரி மாவட்டம் – கொடூர சம்பவம்.
ஆக் 22, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டத்தின் மயிலாடி பேரூராட்சிக்கு உட்பட்ட விருசடி காலனி பகுதியில் மனதை பதறவைக்கும் அளவுக்கு ஜாதி வெறி கும்பல்கள் நடத்தி வைத்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதி ஆதிக்கத்தின் பெயரில் கூடிய கும்பல்கள், குற்றமற்ற விருசடி ஊர் மக்கள்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இரத்தம் சொட்டும் அந்த சம்பவத்தில் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் அனைவரும் தற்போது நாகர்கோவிலின் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிர் தப்ப…
விழுப்புரம் மாவட்டம் தாயனூர் ஊராட்சியில் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி.
விழுப்புரம் மாவட்டம் மலையனூர் ஊராட்சி ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் அரசி ன் சாதனைகள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்படகள் கண்காட்சி நடைபெற்றது. புகைப்படக் கண்காட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொறுப்பேற்று முதல் பணியாக ஐந்து முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்களான அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் நிதி உதவி ரூ.4.000/, வழங்கும் திட்டம் விடியல்பயணத்…
REV. Father பெஞ்சமின் மறைவு.
கோவை மாநகர் மாவட்டம், இராமநாதபுரம் பாரதிதாசன் நகர், ஆசிரியர் தேவராசன் அவர்களின் மருமகன் REV. பெஞ்சமின் மறைவு. மறைந்த அவர்களின் மகன் பிலிப்பைன்ஸ் நாட்டில் படித்து கொண்டிருந்தார், தந்தை மறைவுக்கு இந்தியா வருவதற்கு விசா தொடர்பான பிரச்சினை இருந்தது. இராமநாதபுரம் பகுதி கழக செயலாளர் ப. பசுபதி , அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் ( சிறுபான்மையினர் நலத்துறை) தொடர்பு கொண்டு உதவுமாறு கூறினார். அமைச்சர் உடனடியாக பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தொடர்பு கொண்டு மாணவரை…
விழுப்புரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் விடுத்துள்ள பத்திரிக்கைச் செய்தி.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிப்படி விழுப்புரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகம் 15.7.2025. அன்று தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது மேற்கண்ட முகாமில் 15 துறைகள் சார்பாக பொதுமக்கள் மனுக்களை நேரடியாக வழங்கலாம் மேற்படி முகாமில் மருத்துவ காப்பீடு அட்டை ஆதார் சேவை இ. சேவை சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கொணரும் மகளிர் நேரடியாக சென்று விண்ணப்ப படிவம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும் அதன்…
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
நாகர்கோவில் ஆக : 22 கன்னியாகுமரி மாவட்டம் – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏற்பட்ட மனக்குமுறல் குறித்து விரிவான அறிக்கை. அரசு வழக்கமாக மாதந்தோறும் ஒழுங்கு செய்வது போல, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலிருந்தும் விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைப்பதற்காக வந்திருந்தனர். முக்கிய புகார்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் ஆட்சியரின் புறக்கணிப்பு குற்றச்சாட்டு: கூட்டம் நடைபெற்றபோது, மாவட்ட ஆட்சியர் திருமதி….
நாகர்கோவில் அருகே மேலசூரங்குடி கோல்டன் சிட்டியில் வீட்டு பிரச்சனை காரணமாக இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
ஆக்.21 – கன்னியாகுமரி இந்த மோதலில், கட்டை மற்றும் கல் கொண்டு தாக்கியதால், ஒருவருக்கு தலைக்காயம் ஏற்பட்டு மண்டை உடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது அந்தப்பகுதியில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு ஆவணித் திருவிழா தொடக்கம்.
ஆக 22, கன்னியாகுமரி கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமை பகுதியில் ஆவணித் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிட்டு, பள்ளியறை திறத்து அய்யாவுக்கு பணி விடை நடைபெற்றது. அதன் பின்னர் கொடிப்பட்டம் திருக்கொடியேற்றம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மொத்தம் 11 நாட்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில், எட்டாம் நாள் கலிவேட்டையும் மற்றும் 11ஆம் நாள் தேரோட்டமும் மிக விமர்சையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும்…
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி அருகே மருமகனை கல்லால் தாக்கி கொலை செய்த மாமனார் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
காதல் திருமணம் செய்த மனைவியை அழைத்துச் செல்ல வந்த சிபின் (25) என்பவருக்கும் மாமனார் ஞானசேகரனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயமடைந்த சிபின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்துக்கு தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.
