Headlines

திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 108-வது பிறந்த தினவிழா! திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! மத்திய முன்னாள் இணை அமைச்சர் பங்கேற்பு!

திருநெல்வேலியில், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி 108-வது பிறந்த தினவிழா! திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்! மத்திய முன்னாள் இணை அமைச்சர் பங்கேற்பு!

திருநெல்வேலி,நவ.19:-இந்திய திருநாட்டின், 3-வது பிரதம மந்திரியும், முதலாவது பெண் பிரதம மந்திரியும், உலக அளவில் அதிக மக்களால் விரும்பப்பட்ட பெருமைக்குரிய அரசியல் தலைவரும், இரும்பு பெண்மணிமணியுமான அன்னை இந்திராகாந்தியின், 108-வது பிறந்த தினம், நாடெங்கிலும் கொண்டாடப்பட்டது. இந்நாளை முன்னிட்டு, திருநெல்வேலி வண்ணார் பேட்டையில் உள்ள, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பில் உள்ள, அவருடைய திருவுருவச்சிலைக்கு, திருநெல்வேலி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.சங்கரபண்டியன் தலைமையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முன்னாள் இணை அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மேற்கு மாவட்ட, காங்கிரஸ் பொருளாளர் எஸ்.பி. முரளி ராஜா ஆகியோர், “மலர் மாலை” அணிவித்து, மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில், மாநில காங்கிஸ் பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்க குமார், “பரணி” இசக்கி, மாநகர மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் ராஜேஷ் முருகன், துணைத் தலைவர்கள் ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன், சிவன் பெருமாள், பொதுச் செயலாளர்கள் துரை, செந்தில்குமார் செய்யது அலி,தங்கராஜ், மண்டல தலைவர்கள் மாரியப்பன்,கெங்கராஜ் ,முகம்மது அனஸ் ராஜா, மாவட்ட செயலாளர் சுலைமான், மாணவர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ், மகளிர் அணி ஸ்டெல்லா மேரி உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கமிட்டி அலுவலகத்தில், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், வட்டார காங்கிரஸ் தலைவர் டியூக் துரைராஜ் ஆகியோரின் பிறந்த நாள், கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை, காங்கிரஸ் செயல்வீரர்கள் வினோத், முரளி, அந்தோணி ஆகியோர், சிறப்பாக செய்திருந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *