சுமார் 350 குடும்பங்கள் வசித்து வரும் இந்தப் பகுதியில், நிலத்திற்கான இழப்பீடு ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட போதிலும், முறையான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி மக்கள் வெளியேற மறுத்து வந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, “அரசு ஏற்கனவே பெருங்குடியில் 2 செண்ட் நிலமும், ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடும் கட்டித் தர முன்வந்துள்ள நிலையில், மக்கள் தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவது முறையல்ல” எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
வரும் 15 நாட்களுக்குள் மக்கள் தாங்களாகவே முன்வந்து காலி செய்யாவிட்டால், சட்டப்படி பலத்தைப் பிரயோகித்து நிலத்தை அரசு தன்வசப்படுத்திக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி
