தமிழ்நாடு
மனிதநேய தொழிலாளர் சங்கம் (MTS) – திருவிதாங்கோடு பேரூர் கிளை முதல் ஆண்டு துவக்க விழா: மாநில துணைத் தலைவர் பி. எஸ். ஹமீது சிறப்புரையாற்றினார்…
திருவிதாங்கோடு, 03 மனிதநேய மக்கள் கட்சியின் தொழில் பிரிவு அமைப்பான மனிதநேய தொழிலாளர் சங்கம் (MTS), திருவிதாங்கோடு பேரூர் சார்பாக முதலாவது ஆண்டு துவக்க விழா மற்றும் நேம் பேட்ஜ் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட மனிதநேய தொழிற்சங்க செயலாளர் சபா அலி தலைமையில் திருவிதாங்கோடு துரப்பு ஜங்ஷனில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் அன்புச் சகோதரர் பி. எஸ். ஹமீது அவர்கள் மனிதநேய மக்கள்…
தனது சொந்த வீட்டிற்கு செல்ல விடாமல் மூதாட்டியை கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு.!
திண்டுக்கல் செய்தி3.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தென்னம்பட்டி ஊராட்சி புதூர் கெச்சேயினிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா மனைவி பெருமாள் அம்மாள் வயது 70. அவருடைய உறவினர்களான கோபால் சரவணன் ஆகியோர் பெருமாள் அம்மாவின் நிலத்தையும் வீட்டையும் அபகரிக்கும் நோக்கில் அவரது இரு மகன்களையும் அடித்து ஊரை விட்டு விரட்டி விட்டனர். ஏற்கனவே தான் 30 வருடமாக குடியிருந்து வந்த தனது இடத்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும் தனக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. ஏற்கனவே வட மதுரை காவல் நிலையத்தில்…
திருநெல்வேலி பேட்டை, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்காக நடைபெற்ற, பாராட்டு விழா! பதக்கம், கோப்பை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டிய தலைமையாசிரியை!
திருநெல்வேலி,நவ.3:-நெல்லையை அடுத்துள்ள, பேட்டை “நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி” யில், மாவட்ட ஜுனியர் “அட்யா- பட்யா'(ATYA PATYA) “சேம்பியன்சிப்” போட்டியில், “தங்கப்பதக்கம்” பெற்ற மாணவர்களுக்கு, பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி, இன்று (நவம்பர்.3) காலையில், பள்ளித் தலைமையாசிரியை “முனைவர்” ரோகிணி தலைமையில், நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, அவர் பதக்கம், சான்றிதழ் மற்றும் கோப்பை ஆகியவற்றை வழங்கி, பாராட்டியதுடன், அனைவருக்கும் நல்வாழ்த்துகளையும், தெரிவித்தார். இந்த, வெற்றியின் மூலம், மாணவர்கள் உயர் கல்வி பயிலும் தகுதி பெற்றுள்ளனர்! அதுமட்டுமல்லாமல்,…
திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டை மண்டலத்தில், சுகாதார மேம்பாட்டு பணிகளை திடீர் ஆய்வு செய்த, மாநகராட்சி ஆணையாளர்!
திருநெல்வேலி,நவ.3:-ஆணையாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான டாக்டர் மோனிகா ராணா இன்று (நவம்பர்.3) காலையில், பாளையங்கோட்டை மண்டலம், சாந்திநகர் மற்றும் ரகுமத்நகர் பகுதிகளில், மழைக்காலத்தில் சேகரமாகும், மழைநீர் தேங்காத வண்ணம் பாளையங் கால்வாய், “கக்கன் நகர்” குளத்திற்கு செல்லும் வகையில், புறவழி சாலையில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காக, மேற்கொள்ளப்பட்டு வரும், சுகாதார மேம்பாட்டு பணிகளை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பேசிய ஆணையாளர், பணிகளை விரைந்து முடித்திட, அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மேலப்பாளையம்…
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்…
நீலகிரி மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகமான உதகை கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவை தலைவர் போஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் , தேர்தல் பணி செயலாளர், அரசு கொறடா மாண்புமிகு கா.ராமசந்திரன், சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பரமேஸ்குமார், தென்றல் செல்வராஜ், திராவிடமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் SIR வாக்காளர் சிறப்பு தீவிர வாக்காளர்…
உடுமலை ஒன்றியத்தில் கிராம சபை கூட்டம்
உடுமலை நவம்பர் 02. உடுமலை நவ.3- கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் கிராம ஊராட்சிகளில் ஆறு நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி உள்ளாட்சி தினத்தை ஒட்டி உடுமலை ஒன்றியத்திற்குட்பட்ட 38 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி போடி பட்டி ஊராட்சி சுண்டக்காம்பாளையத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்ட வளர்ச்சி அதிகாரி சிவகுருநாதன்( வ.ஊ) தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து நடந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம்…
உடுமலை உழவர் சந்தையில் ரூ .2/1/2 கோடிக்கு காய்கறிகள் விற்பனை.
உடுமலை நவம்பர் 02. உடுமலை உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூபாய் இரண்டரை கோடி காய்கறிகள் விற்பனையானது.உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் விளையும் காய்கறிகள். கீரைகள், பழங்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்வதால் காய்கறி களின் விளையும் குறைவாக இருக்கும் இதன் காரணமாக உடுமலை நகரம் மட்டுமல்லாமல் சுற்றுவட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் உழவர் சந்தைக்கு வந்து…
உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை யில் புதிய சுகாதார வளாகம்.
உடுமலை நவம்பர் 02. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கும் திருமூர்த்தி அருவிக்கும் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த சுகாதார வளாகம் முழுமையாக பழுதடைந்துவிட்ட நிலையில் அதனை அகற்றிவிட்டு அதே இடத்தில் ஆண்கள் பெண்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
பொன்விழா காணும் அமராவதி முதலைப் பண்ணை சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.
உடுமலை நவம்பர் 02. உடுமலை அருகே அமராவதி முல்லைப் பண்ணை துவக்கி 50 ஆண்டுகளாகும் நிலையில் சிறப்பு நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும் என வன ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் ஆசியாவிலேயே சிறப்பு வாய்ந்த சதுப்பு நில வாழ் முதலைகள் பராமரிக்கும் முதலைப் பண்ணை 1976 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இப்பண்ணையில் குட்டிகள் முதல் 70 வயதான முதலைகள் வரை உள்ளன….
கோவை நகர்புற நலவாழ்வு மையத்திற்கு உபகரணங்கள் வாங்க நன்கொடை.
சமூக செயற்பாட்டுக் களம் சார்பில் கோவை,கோவில் மேடு நகர்புற நலவாழ்வு மையத்தில் ஊசி மருந்துகள் வைப்பதற்கு தேவையான குளிர்சாதன பெட்டி, மருந்துகள் வைப்பதற்கான அலமாரிகள், நோயாளிகள் அமர்வதற்கான இருக்கைகள் மற்றும் பயனாளர்களுக்கு மருந்துகள் வழங்க தேவையான முன்று அளவுகளில் 6000 கவர்கள் நேற்று மாலை, (01/11/2025) நகர்புற நலவாழ்வு மையத்தின் மருத்துவரிடம் வழங்கப்பட்டது. கோவை மாவட்ட செய்தியாளர்- சம்பத் குமார்
