தமிழ்நாடு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரங்கப்பனூர் ஊராட்சியில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் ஒன்றியம்t ரங்கப்பனூர் ஊராட்சியில் தமிழக முதல்வரின் ஆணையின்படியும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படியும் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் வசந்தம்_ கார்த்திகேயன் B.Sc MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி காலை 10 மணி அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் தலைவர் R.M.S.K. அர்ச்சனா காமராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர், தலைமை ஆசிரியர், தாய்மார்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் பாலியல்…
திருப்பாலபந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் உட்கோட்டம் திருப்பாலபந்தல் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பூங்குன்றன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் உறுப்பினர் கல்வித் திட்டம்.
நீலகிரி மாவட்டக் கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பாக குந்தா வட்டத்தில் செயல்பட்டு வரும் ஐயன் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல் எல்லையில் உள்ள மேல்குந்தா கிராமத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமை தாங்கினார். தனது தலைமையுரையில் இங்கிலாந்தில் 1844ம் ஆண்டு ராக்டேல் முன்னோடிகளால் தொடங்கப்பட்ட கூட்டுறவு இயக்கமானது இந்தியாவில் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது அறிக்கையின் அடிப்படையில் 1904ம் ஆண்டு தொடங்கப்பட்டது…
நீலகிரியில் பாறைகள் விழுந்து சாலைகள் சேதம்.
நீலகிரி | கனமழை காரணமாக கல்லட்டி மலை பாதையில் 2 பாறைகள் விழுந்து சேதமடைந்த சாலை – நாளை (மே 27) வரை போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தம்
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கண்டு கொள்வாரா?
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் ஆசனூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் எப்பொழுதும் பூட்டிய நிலையில் உள்ளது கிராம நிர்வாக அலுவலர் வருவதில்லை கிராம உதவியாளர் வந்து அலுவலகத்தை திறப்பதில்லை கிராம நிர்வாகி அலுவலகத்துக்கு போன் செய்தால் போன் எடுப்பதில்லை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் கண்டு கொள்வாரா என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளார்
Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குகிறது இந்திய அஞ்சல் துறை.
இந்திய அஞ்சல் துறை அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்களிடமும், மக்களிடமும் ஊக்குவிக்கும் விதமாக Dhai Akhar கடிதம் எழுதும் போட்டியை ஆண்டுதொரும் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்குகிறது. கடந்த வருடத்திற்கான 2024-2025 கடிதம் எழுதும் போட்டியில் பழனி அக்ஷயா அகாடமி பள்ளியை சார்ந்த மாணவி செல்வி. V தரணி ஸ்ரீ அவர்கள் 18 வயதுக்குட்பட்டவருக்கான அஞ்சல் உறையில் கடிதம் எழுதும் பிரிவில் மாநில அளவில் இரண்டம் இடம் பெற்றார். போட்டியில் வெற்றி…
குற்றாலம் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரிப்பு.
தென்காசி மே – 24 தென்காசி மாவட்டம் தென்காசி அடுத்துள்ள குற்றாலம் பகுதிகளில் தற்போது சீசன் தொடங்கியுள்ள நிலையில் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் உள்பதி பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக பிரதான அருவி புலி அருவி ஐந்தருவி பழைய குற்றாலம் அனைத்து பகுதிகளிலும் நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக குளிக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….
சிம்ஸ் பூங்காவில் பூங்காவில் 131 ஆண்டு பழமை வாய்ந்த மரம் அதிக காற்று வீசியதின் காரணமாக நடைபாதையில் முறிந்து விழுந்தால் பரபரப்பு
பழ கண்காட்சி இன்று நடைபெறும் நிலையில் சிம்ஸ் பூங்காவில் மிகவும் பழைமையான ராட்சத மரம் பாதிப்பு நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில்இன்று 65 ஆவது பழ கண்காட்சி நடைபெறுகின்றது இந்த நிலையில் பூங்காவில் நூற்றாண்டு பெருமை கொண்ட 131 ஆண்டு பழமை வாய்ந்த ராட்சதமரம் அதிக காற்று வீசியதின் காரணமாக நடைபாதையில் முறிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக சுற்றுலா பயணிகள் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது குன்னூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மரத்தை அறுத்து அகற்றும் பணியில்…
கதண்டு வண்டு கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் கிராமத்தில் மேல் தெருவில் ஒரு வீட்டில் கதண்டு வண்டு இரண்டு கூடு கட்டி கூட்டில் பல்லாயிரம் கணக்கான வண்டுகள் மண் தும்பைக்குள் வீட்டின் உரிமையாளர் கண்டுகொள்ளாத இருந்த போது மண் தும்பைக்குள்ள இருந்து வண்டுகள் வெளியேறி சுற்றியுள்ள வீடுகளுக்கும் புகுந்து அப்பகுதி மக்களை கடித்து இரண்டு பெண்கள் ஆபத்தான நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் புகார் இன் அடிப்படையில் களமருதூர் ஊராட்சி மன்றத்தின் சார்பாக தீயணைப்புத்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு.
புளியம்பாறையில் இருந்து ஆமைக்குளம் கல்லூரிக்கு செல்லக்கூடிய சாலையின் குறுக்கே ஓடக்கூடிய நாரங்கா கடவு ஆற்றின் குறுக்கே பாலம் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் ஒப்புதல் கொடுத்து நிதி ஒதுக்கிய பின்பும் இன்னும் பணி தொடங்காமல் இருக்கின்றது என்ற காரணத்திற்காக. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் இன் புளியம்பாறை கிளை செயலாளர் தோழர் சுபைர் அவர்கள் தலைமையில் கட்சி தோழர்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்து.
