தமிழ்நாடு
நீலகிரி மாவட்டம் T1 மத்திய காவல்நிலையம் சார்பாக போதையில்ல தமிழகம் என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
போதைப் பொருட்களை தடுப்பதற்கு காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டிலேயே தமிழ்நாட்டு காவல் துறை தான் போதைப்பொருள் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய கால கட்டத்தில் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு மிக முக்கியமானது. பள்ளி மாணவர்களில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரையும் போதைப் பொருள் விழிப்புணர்வு சென்று சேர வேண்டும். போதை பொருள் விழிப்பு தினத்தினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படி B1 உதகை நகர மத்திய…
விழுப்புரம் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு மது மதுவிலக் கு மற்றும் அய்த்திர்ளவை துரை சார்பில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர் பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷே.ஷேக் அப்துல் ரகுமான்.இ.ஆ.ப. அவர்கள் இன்று கொடியேற்றி துவக்கி வைத்தார் உடன் உதவி காவல் கண்காணிப்பாளர்த ரவிந்திர் குமார் குப்தா.இ.க.ப. உதவி ஆணையர் கலால் விழுப்புரம் கொட்டாட்சியர்.திரு. முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி
கைக்குழந்தையுடன், காலிக்குடங்களோடு, நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதிதிராவிட மக்கள்!சீரான குடிநீர் வழங்கக்கோரி, கண்டன ஆர்ப்பாட்டம்!
திருநெல்வேலி, ஜூன்.25:-திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரிய கிராமம் “கூந்தங்குளம்” ஆகும்.மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பறவைகள் சரணாலயம், இங்கு தான் உள்ளது. முழுமையாக ஆதிதிராவிட மக்கள் வசித்து வரும், இங்குள்ள 2-வது வார்டு பகுதியில் கடந்த இரண்டு வாரகாலமாக சீரான குடிநீர் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால், இந்த பகுதியில் வசிக்கும் மக்கள், குடிதண்ணீருக்காக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து, குதண்ணீர் கொண்டுவர வேண்டியதுள்ளது. முறையான குடிநீர் பலநாட்களாக…
பழங்குடியின மாணவிக்கு உயர்கல்வி பயில கல்வி உதவித்தொகையை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திண்டிவனம் பகுதியில் வசித்து வரும் பழங்குடி இருளர் சமுதாயத்தை சேர்ந்த திருமதி. வித்யா என்பவருக்கு சிறப்பு சேர்க்கையின் அடிப்படையில் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் இளங்கால பி.ஏ. தமிழ் பட்டப்படிப்பு படிப்பதற்கான ஆணை மற்றும் கல்வி உதவித்தொகையை மாவட்ட ஆட்சியர் விருப்பம் நிதியிலிருந்து 10000.க்கான வங்கி வரைவேலையினை மாவட்ட ஆட்சித் தலைவர்.திரு.ஷே..ஷேக். அப்துல் ரஷ.ஹ்மான்.இஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார். உடன் திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல்…
காங்கேயம் நகரத்தில் புத்தக திருவிழா துவக்க விழா.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகரத்தில் நடைபெற்ற காங்கேயம் ரோட்டரி புத்தக திருவிழா துவக்க விழா நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் இல பத்மநாபன் ஆகிய நான் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் அவர்கள் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேன்மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஒருவர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம்.A. குரும்பூர் சேர்ந்த ராமலிங்கம் மகன் நரேஷ் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மகேந்திரா வேன் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி இருசக்கரத்தில் வந்த வாலிபர் சம்பவ இடத்தில் பலியானார் இதை குறித்து உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறது. விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்.R. அந்தோணிசாமி
முழுமையாக வெட்டப்படாத மரத்தினால் சாலை விபத்து அபாயம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் களமருதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உளுந்தூர்பேட்டில் இருந்து திருவண்ணாமலை செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை துறையினர் சாலையோரம் இருந்து மிகப் பழமை வாய்ந்த இலுப்பை மரத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அகற்றப்பட்ட நிலையில் அரைகுறையாக கட்டப்பட்டு சாலையில் இருந்து மேல் நோக்கி சுமார் ஒன்றை அடி அளவில் மரத்தை பாதியிலே விட்டு சென்றதால் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனக்குறைவால் மரத்தின் இரவு நேரங்களில் பயணிக்கும் போது பெரும்பளவு விபத்து ஏற்பட்டு அபாயம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம் தமிழ் சங்கம் சார்பாக உலக போதை பொருள் ஒழிப்பு தினம் சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கல்லை மாவட்ட முத்தமிழ்ச் சங்கம் சார்பாக உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம், உலக பொது சேவை தினம், கண்ணதாசன் பிறந்தநாள் விழா, பள்ளி மாணவர்கள் எழுதிய எண்ணங்களும் வண்ணங்களும் நூல் வெளியீட்டு விழா என நாற்பெரும் விழா சங்கராபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முத்தமிழ்ச் சங்க காப்பாளர் கோமுகி மணியன் தலைமை தாங்கினார்,முத்தமிழ்ச் சங்கத் தலைவர் முருககுமார் வரவேற்புரை ஆற்றினார் , பள்ளி உதவி தலைமையாசிரியை ராஜலஷ்மி , முத்தமிச்சங்க பொருளாளர் அம்பேத்கர் அவை முன்னவர்…
பாளையங் கோட்டையில், மாநகர காவல் துறை வாகனங்களை, நேரில் ஆய்வு செய்த திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர்!
காவலர்களின் குழந்தைகளுக்கு, வழிகாட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார்! திருநெல்வேலி, ஜூன்.24:- திருநெல்வேலி மாநகர காவல் துறையின் சார்பிலான பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில், இன்று [ஜூன்.24] காலையில், காவலர்களுக்கான வாராந்திர கவாத்துப்பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியினை நேரில் பார்வையிட்ட மாநகர காவல் தலைமையிடத்து துணை ஆணையர் எஸ்.விஜயகுமார், அதனைத் தொடர்ந்து, மாநகர காவல்துறைக்கு சொந்தமானதாக உள்ள, மோட்டர் சைக்கிள்கள், ஜீப்கள், சிறிய மற்றும் பெரிய வேன்கள் ஆகியவை, முறையாக பராமரிக்கப் படுகின்றனவா? அந்த வாகனங்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளனவா?…
ஆம்பூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவன் உயிரிழப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியைச் சேர்ந்த இளங்கோ மகன் வெற்றி(14). இவருடைய தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில் தனது தாய் சரிதாவுடன் வசித்து வந்துள்ளார். தாய் வீட்டில் அருகே உள்ள தனியார் உணவகத்தில் வேலை செய்து வருகிறார். வெற்றி ஆம்பூரில் உள்ள கண்கார்டியா மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது பழைய குடிசை வீட்டினை இடித்து விட்டு புதிய வீடு கட்ட பழைய வீட்டினை…
