தமிழ்நாடு
அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
ஆக் 18, கன்னியாகுமரி அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், 23 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓய்வூதியர்களுக்கு பணியில் உள்ள தொழிலாளர்கள் பெறும் அகவிலைப்படி, மருத்துவ காப்பீடு, ஒப்பந்த அடிப்படையிலான ஓய்வூதிய…
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பரபரப்பு !ஒப்பந்தத் தொகை வழங்காததால் ஒப்பந்ததாரர் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் முயற்சி !
ஆக் 18, திங்கள்நகர் கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் நேசமணி நினைவு சிறுவர் பூங்கா அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த பணிக்கான ஒப்பந்தத் தொகை ரூ. 33 லட்சம். ஆனால், அந்தத் தொகையை பேரூராட்சி நிர்வாகம் வழங்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒப்பந்ததாரர் தனது குடும்பத்தினர் உடன் கறுப்பு பேட்ஜ் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முனைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசும், பேரூராட்சி அதிகாரிகளும் நிலைமையை ஆராய்ந்து…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர மாவட்ட செயலாளர் அல். காலித் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கை !
ஆக் 18, நாகர்கோவில் இந்திய தேசியக் கொடியை தரையில் வரைந்து, அதன் மையப்பகுதியான அசோக சக்கரம் மீது நடப்பட்ட கம்பத்தால் துளைத்து, அதன் மேல் காவி கொடியை ஏற்றிச் சிதைத்த சம்பவம் மிக ஆத்திரத்தை மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இந்த செயல், தேசிய ஒற்றுமை மற்றும் கொண்டாட்டத்தின் கண்ணியத்திற்கும், இந்திய தேசியக் கொடியின் புனிதத்திற்கும் தெளிவான அவமரியாதை ஆகும். அத்தகைய தேசவிரோத, ஒழுங்குமீறிய செயல்கள் கடுமையாக ஒழிக்கப்பட வேண்டும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்;…
கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் மீனவர்கள் மோதல்: 2 பேர் படுகாயம் !
கன்னியாகுமரி மாவட்டம் அரபிக்கடலில் பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற முட்டம் மற்றும் கடியப்பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கடியப்பட்டணம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த 2 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். “ஆட்சியர் வழங்கிய அனுமதி படி மீன்பிடித்த எங்களை தாக்கிய மீனவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி, பாதிக்கப்பட்ட மீனவர்கள் நாகர்கோவிலில் மீன்வளத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டதால்…
நீலகிரி மாவட்டம் உதகை நகர பாஜக சார்பாக 79வது சுதந்திர தின விழா சீரும் சிறப்புமாக கொடி ஏற்றி சிறப்பிக்கப்பட்டது.
இதில் உதகை நகர தலைவர் ரித்து கார்த்திக் முன்னிலையில் முன்னாள் மாவட்ட தலைவர்H. மோகன்ராஜ் சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டத் துணைத் தலைவர் அருண் ,பிரகாஷ் மாவட்ட பொருளாளர் வெங்கடேஷ், கூட்டுறவு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சன்னா கேசவன் முன்னாள் மண்டல் தலைவர் மயில்சாமி , முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் அனிதா , மருத்துவ பிரிவு தலைவர் டாக்டர் சுரேஷ்பாபு, நீல் பிரகாஷ், சுதாகர், உதகை நகர பொருளாளர் இம்பாலா பாபு, நகர் துணை தலைவர்கள் பரமசிவம்,…
மனிதநேய மக்கள் கட்சி செங்கோட்டை நகர தலைவர் செங்கை அரிப் தலைமையில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
தென்காசி ஆகஸ்ட் 16. தென்காசி மாவட்டம் செங்கோட்டை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் 79வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டை புதிய ரேஷன் கடையின் முன்பாக மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் உமர் கத்தாப் தமுமுக நகர செயலாளர் யாசர் அரபாத் நகர பொருளாளர்முகமது ஹக்கீம் துணைத் தலைவர் ஏ எம் நாகூர் மீரான் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செங்கோட்டை தஞ்சாவூர் ஜமாத் செயலாளர் ஜனாப் திவான் பாதுஷா தேசிய…
கோவை தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.
இந்தியாவின் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள உப்பிலிபாளையம் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex. எம் எல் ஏகலந்து கொண்டு சாமி தரிசனம் செய்த பின்னர் பொது விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் சு நாகலட்சுமி அறங்காவலர் குழு…
கோவை மாவட்ட சுதந்திர தின விழா.
கோவை மாவட்டம் சார்பாக,வ உ. சி மைதானத்தில் 79 சுதந்திர தின விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது, மாவட்ட கலெக்டர் திரு,பவன் குமார் அவர்கள கொடியேற்றி கொடியேற்றி வைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு சிறப்பு செய்தார். சிறப்பாக பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள், மற்றும் காவல் துறை அலுவலக ஊழியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். கோவை மாவட்ட கல்வி துறை சார்பாக மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன, இந்த நிகழ்ச்சிக்கு கோவை கோவை மாநகர…
மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா.
கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாநகராட்சியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய பணியாளர்களுக்கு ரூ 2000 வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் மேயர் கா ரங்கநாயகி ராமச்சந்திரன் வழங்கினார். உடன் மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை மேயர் ரா வெற்றிச்செல்வன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். கோவை : செய்தியாளர் : ஏழுமலை
சுதந்திர தின கொண்டாட்டம்.
நடக்க ரோடு இல்லை,தெருவிளக்கு இல்லை, இரவு 6 மணிக்கு மேல் யானை புலி அட்டகாசம் …சுதந்திரமாக நடமாட வாய்ப்பும் இல்லை… பாதுகாப்பில்லை …… கூடலூர் சட்டமன்றம் தொகுதி, நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிவயல் கிராமத்தில் மக்கள் நடக்க நடபாதையில்லாமல் கொட்டும் மழையில் சுதந்திரதின நிகழ்ச்சி கொண்டாடினர்… தோழர் மாறன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்..திரு கிட்டன் செட்டி அவர்கள் தேசிய கொடியேற்றினார் , தோழர் பெரியார் மணிகண்டன், ராகவன் சிறப்புறையாற்றினர்..தோழர் ராஜகோபால் இனிப்பு வழங்கி ,தோழர்கள் ரெஜிதா ,வாசு,பரமன்,…
