Headlines

திருப்பூர் தெற்கில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.

திருப்பூர் தெற்கில் அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.

ஏப்ரல் 06,

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி கணியூர் பேரூர் கழக அதிமுக முன்னாள் செயலாளர் காஜாமைதீன் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மடத்துக்குளம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் கே.எம்.முபாரக் அலி, ஒன்றிய கழக செயலாளர் சாகுல் அமீது, செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, கணியூர் பேரூர் கழக செயலாளர் பாலகிருஷ்ணன், கணியூர் பேரூராட்சி மன்றத்தலைவர் செந்தமிழ் செல்வி பத்மநாபன், மடத்துக்குளம் தொகுதி பொறுப்பாளர் கரும்புக்கடை சாதிக், மாவட்ட பொறுப்பு உறுப்பினர் ராதிகா இளங்கோவன் வழக்கறிஞர் மோகன், சங்கர் உள்ளிட்ட கணியூர் பேரூர் கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக மாவட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *