Headlines

புதிய மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அறிமுகக் கூட்டம் – அமைப்பு பலப்படுத்த தீர்மானம்.

புதிய மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் அறிமுகக் கூட்டம் – அமைப்பு பலப்படுத்த தீர்மானம்.

நாகர்கோவில்; 18

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சௌத்ரி மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஷேக் முகமது ஆகியோரின் அறிமுகக் கூட்டம் நேற்று மாலை ப்ளூ ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.

கன்னியாகுமரி–நாகர்கோவில் மண்டல துணை செயலாளர் சிறுத்தை தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் இடம்பெற்றன.

கருத்தியல் பரப்புரை மாநில துணை செயலாளர் கோட்டார் யூசுப், மாவட்ட செயலாளர் சௌத்ரி, மண்டல துணை செயலாளர் சிறுத்தை தாஸ், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் திருமாவேந்தன், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ஸ்டெர்லின் பாக்கியதாஸ், மாவட்ட துணை செயலாளர் ஷேக் முகமது, குளச்சல் சட்டமன்றத் தொகுதி மாவட்ட செயலாளர் சுபாஷ் மற்றும் செல்வராஜ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

முதற்கட்டமாக மாவட்ட துணை செயலாளர் (பொ) அம்பேத்வளவன் (எ) பாபு வரவேற்புரையாற்றினார், இறுதியாக இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் (பொ) யாசர் நன்றியுரை ஆற்றினார்கள்.

இந்த நிகழ்வின் போது, மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் எழுச்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் கொள்கையை ஏற்று, மாவட்ட செயலாளர் சௌத்ரி தலைமையில் கட்சியில் இணைந்தனர். புதியதாக இணைந்தோருக்கு கட்சி துண்டு அணிவித்து வரவேற்பும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டதுடன் உறுதி மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

மாவட்ட செயலாளர் அனுமதி பெற்றே சுவரொட்டிகள், பிளெக்ஸ் உள்ளிட்ட விளம்பரப் பொருட்கள் தயார் செய்யப்பட வேண்டும்.

முகாம் கட்டமைப்பை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

பூத் முகவர்கள் படிவங்களை உடனடியாக வழங்க வேண்டும்.
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட நிகழ்வுகள் ஊடக பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் தான் பதிவு செய்ய வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் மகளிர் பொறுப்பாளர்கள் ராணி, செல்வி, பெருவாரியான நிர்வாகிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு, புதிய மாவட்ட செயலாளர் சௌத்ரி மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஷேக் முகமது ஆகியோருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *