தென்காசி பிப்ரவரி 9
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் விழா செங்கோட்டை மேலூர் திருமண மண்டபத்தில் துவக்கி வைக்கப்பட்டது.
தமிழக அரசின் முத்தான திட்டமான நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி ஊராட்சி மன்றங்களில் பணி புரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் விரிவாக்கம் இன்று திருவள்ளூர் மாவட்டம் போளி வாக்கத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கப்பட்டதை அடுத்து செங்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் 100 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
அவர்களுக்கான உணவுகளை பெறுவதற்கான இரண்டு அடுக்கு உணவு பாத்திரங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு இன்றைய முதல் நிகழ்வில் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் அருஞ்சுவை விருந்து வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியை செங்கோட்டை நகர மன்ற தலைவி ராம லெக்ஷ்மி மற்றும் செங்கோட்டை முன்னாள் நகர் மன்ற தலைவர் தற்போதைய நகர்மன்ற உறுப்பினர் S.M. ரஹீம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் செல்வராஜ் நகர்மன்ற உறுப்பினர்கள் பேபி ராஜப்பாத்திமா மேரி நியமன உறுப்பினர் நவாஸ் பூட்டோ நகராட்சி கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஹாரிஸ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் தூய்மை பணியாளர்கள் சுமார் 100 பேர் நகர்மன்ற தலைவர் ராம லெட்சுமி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது .
மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்
