நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுங்கட்சி பிரமுகர் தலைமையில் ஒரு தரப்பினரை தள்ளி வைத்து கோயில் திருவிழா கொண்டாட்டம் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத அதிகாரிகள் கண்ணீர் மல்க பெண்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி R கல்லுப்பட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதாகவும் ஊரின் மத்தியில் அனைவருக்கும் பொதுவாக மாரியம்மன் கோயில் உள்ளதாகவும் இந்த கோயிலில் பல வருடங்களாக அனைவரும் ஒன்றிணைந்து சாமி கும்பிட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் அதிகம் மக்கள் தொகை உள்ளதாக கூறி மற்றொரு தரப்பினரை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை அதேபோல் கோயில் திருவிழாக்களிலும் வரி வசூல் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட 20 குடும்பத்தினரும் ஊர் கூட்டம் போட்டு எங்களிடம் வரி வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையிலும் உங்களது கோரிக்கை நாங்கள் ஏற்க மாட்டோம் என குறிப்பிட்ட சமுதாயத்தினர் கூறியதால் மனம் உடைந்த 20 குடும்பத்தினர் காவல்துறை வருவாய்த்துறை என அரசு அதிகாரிகளிடம் புகார் மனு வழங்கி எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.
நீதிமன்றத்தில் கடந்த ஒன்றாம் தேதி நீதி அரசர் புகழேந்தி அனைவரும் ஒன்றாக இணைந்து சாமி கும்பிடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டதாகவும் அதன்படி வட்டாட்சியர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தீர்ப்பு நகலை வழங்கியும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாமல் இப்பகுதியை சேர்ந்த முக்கிய ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களை 20 குடும்பத்தையும் தள்ளி வைத்துவிட்டு கடந்த செவ்வாய் புதன் வியாழன் 2ஆம் தேதி முதல் திருவிழாவை கொண்டாடியதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை ஒதுக்கி வைத்தவர்கள் மீது புகார் அளித்ததன் பேரில் ராம்குமார் சிவா பெருமாள் வேல்முருகன் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதேபோல் நீதிமன்றம் மூலம் பெருமாளுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளதாகவும் இருந்த போதும் தற்போது வரை தங்களிடம் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் திருவிழாவுக்கு வரி வசூல் செய்யவில்லை என்று பெண்கள் கண்ணீருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவுடன் வந்தனர்
மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்களது குழந்தைகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த வருட திருவிழாவுக்கு அதிக அளவு வரி வழங்காதவர்கள் இருக்கிறார்கள் அவர்களிடம் தற்போது வரை வரி கேட்டு வருகிறார்கள் அவர்களைப் போல் எங்களிடமும் வரியை வாங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட நிருபர் : பாலசிந்தன்.
