தென்காசி ஆகஸ்ட் – 12
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,3 வது வார்டுகளுக்குட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் குறைதீர்க்கும் சிறப்பு முகாமினை கடையநல்லூர் நகரமன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
உடன் கடையநல்லூர் நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் மற்றும் கடையநல்லூர் வட்டாட்சியர் மற்றும் 5 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன் என்கிற கண்ணன் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சுகுமார் மற்றும் மதன் கடையநல்லூர் அப்சரா பாதுஷா மற்றும் முருகானந்தம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
