பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.08) சென்னையில்
தொடங்கிவைக்கிறார் இதனை தொடர்ந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்.
2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
