திருநெல்வேலி
பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சரும், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலியில் வெளியிட்டுள்ள, “செய்திக்குறிப்பு” ஒன்றில், தெரிவித்திருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. புதிய “பொதுச் செயலாளர்” ஆக, புதுமனை
வ. லிங்கத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட பா.ஜ.க. தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், வள்ளியூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஜெகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், இந்த
புதிய பொறுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில், நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். புதிதாக பொறுப்பேற்றுள்ள “புதுமனை” வ. லிங்கத்துரைக்கு, மாவட்டம் முழுவதிலுமுள்ள பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் அந்தந்த பகுதி மக்கள் ஆகியோரிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. “பா.ஜ.க.வின் கூடுதல் வளர்ச்சிக்கும், மாவட்ட மக்களின் நலன்களுக்காகவும், தன்னுடைய சேவையை அர்ப்பணிப்பதாக, புதிய பொதுச்செயலாளர் லிங்கதுரை “உறுதி”படத் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.*
