தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” வைத்து, வியாழக்கிழமை [அக்.24] மாலையில், நடைபெற்றது. முஸ்லிம் கல்வி கமிட்டி செயலாளர் மீரான் முகைதீன் தலைமை வகித்தார். முஸ்லிம் கல்வி கமிட்டி பொருளாளர் அப்துல் மஜீத், அனைவரையும் வரவேற்று பேசினார்.முஸ்லிம் கல்வி கமிட்டி தலைவர் அப்துல் காதர், முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மீரா முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். “சிறப்பு” அழைப்பாளராக, பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் கலந்து கொண்டு,11-வது வகுப்பு பயிலும், 289 மாணவ- மாணவிகளுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் குறிப்பிடுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை, வழங்கியுள்ளார். வழங்கியும் வருகிறார். குறிப்பாக, 3 சதவீதம் இட ஒதுக்கீடு தந்து, இஸ்லாமிய மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, பாளையங்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட, இந்த மேலப்பாளையத்தில், தற்போது வாடகைக்கட்டிடத்தில் இயங்கிவரும் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கென, மேலப்பாளையம் மண்டலம் அலுவலகம் அருகே, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதுபோல, அரசு மருத்துவமனைக்கென புதிய கட்டிடம் தயாராகி வருகிறது. இவை தவிர,
பாதாள சாக்கடைத்திட்டம், குடிநீர் மற்றும் சாலை வசதிகளும், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு தாமிரபரணி நதி மூலம், செயல்படுத்தப்படவுள்ள “கூட்டுக்குடிநீர்த்திட்டம்” வாயிலாக, மேலப்பாளையம் மக்களுக்கு, கோடைகாலத்திலும் கூட தட்டுப்பாடு இல்லாமல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். இனிவரக்கூடிய காலங்களிலும், மேலப்பாளையத்துக் கென, பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன! – என்று, கூறினார். இந்த நிகழ்ச்சியில்,
திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ,
மேலப்பாளையம் மண்டலத்தலைவர் சா. கதீஜா இக்லாம் பாசிலா , மேலப்பாளையம் பகுதி திமுக செயலாளர் “துபாய்” சாகுல் அமீது, நெல்லை மாநகராட்சி கவுன்சிலர்கள் செ. சபி அமீர் பாத்து, து.சகாய ஜூலியட் மேரி,”ஹாபிஸ்” எம்.எஸ். முகைதீன் அப்துல் காதர், முஸ்லிம் கல்விக் கமிட்டி உறுப்பினர்கள் முகம்மது அபுபக்கர், முகம்மது அலி ஜின்னா, ஹபீபுர் ரகுமான், உஸ்மான், திமுக நிர்வாகிகள் “குறிச்சி” ப.ஆனந்த்,எஸ்.செய்யது மசூது, கே.ஏ.புகாரி, “அல் அமீன்” டி.எம்.காஜா மைதீன், நெல்லை ஜாபர் உட்பட, பலர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசின், “விலையில்லா மிதிவண்டிகள்” வழங்கும் நிகழ்ச்சி, திருநெல்வேலியை அடுத்துள்ள, மேலப்பாளையம் “முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில்” நடைபெற்றது.
