தென்காசி ஜனவரி 8.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள தேன் பொத்தை ஊராட்சிக்கு உட்பட்ட
திருமலாபுரம் பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது இந்நிகழ்வில் 8 ஊராட்சி மன்ற தலைவி பார்வதி கனி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக தென்காசி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லம் திவான் ஒலி கலந்து கொண்டு பொங்கல் தொகுப்பாக கரும்பு பச்சரிசி சர்க்கரை வேஷ்டி சேலை ரூபாய் 3000 அடங்கிய தொகுப்பை வழங்கினார் தொகுப்பை பெற்ற பயனாளிகள் தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தகை மகளிர் விடியல் பயணம் குழந்தைகளுக்கான படிப்பு ஊக்கத்தொகை இலவச மடிக்கணினி இலவச மிதிவண்டி இன்னும் ஏராளமான நல்ல திட்டங்களால் பயன்பெற்று வருவதாகவும் இந்த 3000 ஆன தொகுப்பு பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கு கிடைக்கப்பெற்ற வெகுமதி என்று வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியில் கிளைக் கழக செயலாளர் திருமலாபுரம் முருகன் மணலூர் திவான் ஒலி வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வல்லம் செல்லத்துரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் காளிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர் .
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம்
