செப் 10, கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். அழகுமீனா அவர்கள் இன்று (10.09.2025) கோணம் அரசு பொறியியல் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களிடம் உரையாற்றினார்.
இம்முகாமில் வங்கிகள் மூலம் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், கல்விக் கடன் பெறும் முறைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பல்வேறு துறை அதிகாரிகள், வங்கி மேலாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
