௦3.09.2025, புதன்கிழமை காலை 09.30 மணியளவில் கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தின் வார்டு எண் 80-ல், “எல்லோருக்கும் எல்லாம்” திட்டத்தின் கீழ், “உங்களுடன் ஸ்டாலின் முகாம்” இன்று சிறப்பாக நடைபெற்றது.
இந்த முகாம் மாநகராட்சி திருமண மண்டபத்தில், கெம்பட்டி குடியிருப்பு, தர்மராஜா கோவில் தெருவில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், 13க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் 43க்கும் மேற்பட்ட அரசுசாரா சேவைகள், பொதுமக்களுக்கு நேரில் வழங்கப்பட்டு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், மருத்துவ முகாமுகள் போன்ற பல சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் 80வது வார்டு மாமன்ற உறுப்பினர் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெவ்வன் முன்னிலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex MLA அவர்கள் பங்கேற்று முகாமில் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அதன்பின்னர் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவ குரு பிரபாகரன், முகாமை பார்வையிட்டு அரசு அதிகாரிகளிடம் முகாம் பற்றிய ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்து சிறப்பாக பணிகள் நடைபெறவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
இந்நிகழ்வில் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, தெற்கு சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.
இந்த முகாம், தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு சிறப்பான முயற்சியாக இருந்தது.
பொதுமக்கள் அனைத்து, அரசு துறைகளும் ஒன்றாக ஒரே இடத்தில் நலன் சார்ந்த பல்வேறு உதவிகளை “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு திட்ட முகாம் மூலம் ஒரே மையத்தில் பெற்றது.
என்பதில் மக்கள் மகிழ்ச்சியான தருணம் என்று பொது மக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவித்து கொண்டனர்.
இந்நிகழ்வில் துணை ஆணையர் செந்தில் குமரன், மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் பி.நாச்சிமுத்து, கெம்பட்டி பகுதி பொறுப்பாளர் என்.ஜே.முருகேசன் வட்டக்கழகச் செயலாளர்கள்: நா. தங்கவேல், டவுன் பா.ஆனந்த் மற்றும் கேசவன் இளைஞரணி தினேஷ், கராத்தே ராஜேஷ், வானவன் மணி, புயல் சரவணன், மேலும், முகாம் குழு உறுப்பினர்கள், BLA, BDA, BLC பூத் கமிட்டி நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட செய்தியாளர் : சம்பத் குமார்
