வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் மழையால் மலைக்குன்றின் மீது இருந்த ராட்சத பாறை சாலை நடுவில் சரிந்து விழுந்து வாகன போக்குவரத்து பாதிப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தெற்கு மில்லத் நகர். இப்பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாலை ஓரம் முனியப்பன் என்பவர் வீட்டின் அருகில் மலைக்குன்றின் மீது ராட்சத பாறை இருந்துள்ளது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழை காரணமாக ராட்சத பாறை ஒன்று மண் சரிந்து விழுந்து சாலை நடுவில் நின்றுள்ளது. இரவு நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சாலை இருபுறம்…
