Headlines
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய 3 நபர்கள் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இருசக்கர வாகனம் திருடிய சிறார் உட்பட மூன்று பேர் கைது. ரூபாய் 7 லட்சம் மதிப்பிலான 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். எஸ்பி ரஜத்சதுர்வேதி உத்தரவின்.பேரில் உதவி ஆய்வாளர் ஆனந்தராஜ். தலைமையிலான கள்ளக்குறிச்சி குற்றப்பிரிவு துணை ஆய்வாளர் ஏழுமலை. மற்றும் காவல் துறையினர் சிறார் உள்பட மூன்று பேரை கைது செய்து தியாகதுருகம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB.குருசாமி

Read More
அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் உலக சர்வதேச யோகா தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் உலக சர்வதேச யோகா தின நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

உலக சர்வதேச யோகா தினத்தையும் கொண்டாடும் விதமாக அருள்மிகு பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியில் யோகா தின நிகழ்ச்சி கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, கல்லூரியின் செயலர் அவர்களும், மற்றும் கல்லூரி முதல்வர். முனைவர். ரா .ரவிச்சந்திரன் கல்லூரியின் யோகா மன்ற பொறுப்பு ஆசிரியர் பூ.திருப்பதி அவர்களும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். யோகா பயிற்சியினை வழங்க வாழ்க வளமுடன் பேராசிரியர் ரோஜா ஈஸ்வரி, மற்றும் பெருமாள் சாமி ஆகியோர் மாணவர்களுக்கு யோகா முக்கியத்துவம்…

Read More
அகில உலக கூட்டுறவு ஆண்டு - மரக்கன்றுகள் நடும் விழா

அகில உலக கூட்டுறவு ஆண்டு – மரக்கன்றுகள் நடும் விழா.

ஐக்கிய நாடுகள் சபையானது நடப்பு ஆண்டான 2025னை அகில உலக கூட்டுறவு ஆண்டாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் கூட்டுறவு இயக்கங்கள் வாயிலாக பல்வேறு சமூக செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் பதிவாளர் அவர்களின் ஆணையின்படி தமிழ்நாடு முழுவதும் சுமார் பத்து இலட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு நீலகிரி மாவட்டத்தில் சுமார் பன்னிரெண்டாயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் எப்பநாடு பகுதியில் அமைந்துள்ள எப்பநாடு தொழிற்கூட்டுறவு தேயிலை…

Read More
வாகன நிறுத்தத்தை சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

வாகன நிறுத்தத்தை சீர்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

நீலகிரி மாவட்டம் எம். பாலாடாவில் ( முத்தோரை) தினமும் காலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. இருபுறமும் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே போக்குவரத்து காவல்துறை இங்கு வாகன நிறுத்தத்தை ஒழுங்குப்படுத்தி , பொதுமக்கள், மாணவர்கள் தினமும் சிரமமின்றி சென்றுவர, நெரிசல் ஏற்படாதவாறு தகுந்த நடவடிக்கை எடுத்து சீர் செய்து கொடுக்கும்படி, மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்…

Read More
தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு ஆலோசனை.

தமிழ்நாடு முதல்வர் வருகையை முன்னிட்டு ஆலோசனை.

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், கழக தலைவர் தளபதியார் அவர்கள் நமது மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி மாண்புமிகு பொதுப்பணிதுறை, நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு வழிகாட்டுதலின்படி திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி MLA வரவேற்பு பணிகள் குறித்து ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் நேரில் சென்று ஆலோசனை மேற்கொண்டார். இந்நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், மாவட்ட அவைத்தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன், மாவட்ட து.செயலாளர்…

Read More
சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யோகா தின விழா கொண்டாட்டம்

சங்கராபுரம்ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேசிய யோகா தின விழா கொண்டாட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஜெயம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று 21.6.2025 சனிக்கிழமை தேசிய யோகா தினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் துணைத் தலைவர் பி ஏ மகேந்திரன், செயலாளர் சுகந்தி பட்டு ராஜன்,துணை செயலாளர் என் பிரபாகரன் ,முதல்வர் கே சுந்தர பாண்டியன் இருபால் ஆசிரியர் பெருமக்கள் 2000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக சங்கராபுரம் பகுதி மனவள கலை மன்றத்தின் தலைவர் திருவாளர் RVN சீனிவாசன், செயலாளர்…

Read More
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்மசாலையில் கமலக்கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்மசாலையில் கமலக்கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வள்ளலார் சத்திய தர்ம சாலை அறகட்டளையில் மஞ்சபுத்தூர் பாலுசாமி கிராம உதவியாளர் மகன் கமலக்கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு வள்ளலார் தர்மசாலையில் சுமார் 1000 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த சத்திய தர்மசாலையில் தினந்தோறும் அன்னதானம் வழங்குகிறார்கள் அன்னதானம் வழங்க விருப்பப்படுபவர்கள் இந்த எண்ணை அழைக்கவும் 9750450851 கள்ளக்குறிச்சி மாவட்ட நிருபர் GB. குருசாமி

Read More
வாணியம்பாடி அருகே 14 வயது சிறுமியை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

வாணியம்பாடி அருகே 14 வயது சிறுமியை காதலித்து கடத்தி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் குறிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (27). இவர் பெங்களூரில் ஒரு ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் வாணியம்பாடியில் உள்ள இவருடைய உறவினர் வீட்டுக்கு சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு அந்த சிறுமியை காதலித்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை கடந்த 1 ஆம் தேதி அந்த இளைஞர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று திருமணம் செய்துகொண்டார். சிறுமியின் பெற்றோர்…

Read More
இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 88வது நினைவு தினம்

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை சர் பிரடெரிக் நிக்கல்சன் 88வது நினைவு தினம்.

இந்திய கூட்டுறவு இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் சர் பிரடெரிக் நிக்கல்சன் அவர்களது 88வது நினைவு தினம் குன்னூரில் உள்ள அவரது கல்லரையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் நிக்கல்சன் கல்லறைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி பேசியதாவது. நாட்டில் ஏழை எளிய மக்கள் விவசாயிகள் நலனுக்காக செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் உருவாக காரணமானவர் சர் பிரடரிக் நிக்கல்சன் இங்கிலாந்தில் 1846ம் ஆண்டு செப்டம்பர்…

Read More
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தெற்கு ஒன்றிய, பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆக, புதுமணை வ.லிங்கத்துரை நியமனம்! பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தெற்கு ஒன்றிய, பா.ஜ.க. பொதுச் செயலாளர் ஆக, புதுமணை வ.லிங்கத்துரை நியமனம்! பா.ஜ.க.மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

திருநெல்வேலி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் தமிழக அமைச்சரும், திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலியில் வெளியிட்டுள்ள, “செய்திக்குறிப்பு” ஒன்றில், தெரிவித்திருப்பதாவது:- திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. புதிய “பொதுச் செயலாளர்” ஆக, புதுமனைவ. லிங்கத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட பா.ஜ.க. தலைவர் எஸ்.பி. தமிழ்ச்செல்வன், வள்ளியூர் தெற்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ஜெகன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில், இந்தபுதிய பொறுப்பு அறிவிக்கப்பட்டு உள்ளதாக அந்த அறிக்கையில், நயினார்…

Read More