திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற, மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாம்! மாநகர காவல் ஆணையாளர் பங்கேற்று, மாநகர மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றார்!
திருநெல்வேலி, ஜூன்.18:-தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் [டிஜிபி] உத்தரவுப்படி, மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம், வாரத்தின் ஒவ்வொரு புதன் கிழமையும், தமிழகம் முழுவதிலும் அந்தந்த மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும், இன்று புதன்கிழமை [ஜூன்.18] “மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம்” நடைபெற்றது. பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற இந்த முகாமில், “மாநகர காவல் ஆணையாளர்” சந்தோஷ் ஹாதிமணி…
