நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில் இன்று 11.06.2025 தும்மனட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் இளைஞர் ஈர்ப்பு முகாம் நிகழ்ச்சி மண்டல இணைப்பதிவாளர் திரு. இரா. தயாளன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தனது தலைமையுரையில் கூட்டுறவு இயக்க வரலாறு குறித்தும், கூட்டுறவு இயக்கத்தில் உறுப்பினராக இணைவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும் எடுத்துரைத்தார். மேலும் கூட்டுறவானது தனியார் மற்றும் பொதுத்துறைக்கு இடையேயான இணைப்பு பாலமாக செயல்பட்டு பல்வேறு மக்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கு உதவி புரிந்து வருகிறது…
