உடுமலை நவம்பர் 17.
உடுமலை நகரில் தபால் நிலையம் அமைந்துள்ள பகுதியில் 2 குரங்குகள் சுற்றி வருகின்றன இவை அப்பகுதியில் கடைகளில் புகுந்து பொருட்களை தின்பதுடன் பொதுமக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.
இப்பகுதியில் அரசு மருத்துவமனை வட்டாட்சியர் அலுவலகம் நீதிமன்றம் கிளை சிறைச்சாலை பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன தினசரி ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர் அதிக அளவில் மரங்களும் இந்த பகுதியில் உள்ளதால் குரங்குகள் மரத்துக்கு மரம் தாவி வருகின்றன.
அருகிலேயே வனத்துறை அலுவலகம் உள்ளது குரங்குகளை பிடித்து வனத்தில் விடுவிக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் உள்ளனர் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் குரங்குகளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
