Headlines

நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில் பரபரப்பு கடல் உணவு தொழிற்சாலையா அல்லது தொழிற்கூடமா, அடர்ந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் அச்சம்!!!

நாகர்கோவிலில்; நவ.10

குமரி மாவட்டம் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில், பொதுமக்கள் அடர்த்தியாக வசிக்கும் இடத்தில், சமீப காலமாக ஒரு கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தக் கட்டிடம், குமரி மாவட்டத்தை தலைமையகமாகக் கொண்டு, திருநெல்வேலி மாவட்டத்தின் ராதாபுரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு பிரபல மீன் மற்றும் மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் புதிய தொழிற்கூடமாக அமைந்துவருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திறந்த வெளிப் பகுதியில் இயங்கி வந்த அந்த நிறுவனம், தற்போது மக்கள் அடர்த்தியாக வாழும் குடியிருப்பு பகுதிக்குள் தனது புதிய கட்டிடத்தைக் கட்டி வருவது, பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

மீன் மற்றும் மீனிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் உற்பத்தி நிலையம் மக்கள் வசிக்கும் இடத்தின் அருகில் அமைந்தால், சுற்றுச்சூழல் மாசு, துர்நாற்றம், ஆரோக்கிய பாதிப்புகள், மற்றும் கழிவு நீர் மேலாண்மை பிரச்சனைகள் உருவாகும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுகிறது.

இதனால், அப்பகுதி பொதுமக்கள், அந்த நிறுவனம் தேவையான அரசு அனுமதிகள் மற்றும் சுற்றுச்சூழல் சான்றிதழ்களுடன் தான் கட்டுமானப் பணிகளை மேற்கொள்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மேலும், அந்தக் கட்டிடத்தில் எவ்வகையான தொழில்பணிகள் நடைபெறவிருக்கின்றன என்பதும் தெளிவில்லை. அது மீன் மற்றும் மீன் சார்ந்த உணவுப் பொருட்கள் தயாரிப்பு நிலையமா?
அல்லது வெறும் விற்பனை நிலையமா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

இவ்வாறு மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைப்பதைத் தடை செய்யும் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் இல்லையா என்பதையும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

முன்னர் இதேபோன்று, உணவு தயாரிப்பு நிறுவனங்கள் குடியிருப்பு பகுதிகளில் செயல்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன என்பதையும் குறிப்பிட்டு, மக்கள் இப்போது அதேபோன்ற நிலை உருவாகுமோ என்ற அச்சத்தையும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை பொதுமக்களின் இந்தக் கவலைக்கு செவி சாய்த்து நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பொதுமக்களின் ஆரோக்கியம், இயற்கைச் சூழல், மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுமா?
என்பது தற்போது இடலாக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் முக்கியக் கேள்வியாக உள்ளது.

தமிழக விடியல் செய்திகளுக்காக கேமராமேன் ஜெனீருடன்
குமரி மாவட்ட தலைமை நிருபர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *