திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சார்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன.
தொடர்ந்து பேருந்து நிலையத்திலிருந்து இரயில்வே நிலையம் வரை 200 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றன.
இந்நிகழ்வில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி வனிகர் சங்க மாவட்ட தலைவர் ஜே பி சரவணன், சரவனபொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மற்றும் நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை மாநில தலைவர் ரமேஷ் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
தொடர்ந்து நம்பிக்கை நாயகன் அப்துல் கலாமின் 93வது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்திய நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளைக்கு சமூக ஆர்வலர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.