விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலாமேடு அருகே உதவி ஆய்வாளர்கள் திரு.சண்முகம், திருமதி.பவித்ரா மற்றும் காவலர்கள் தலைமையில் ரோந்து பணியில் இருந்த போது சாலாமேடு பிரியதர்சினி நகர் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து சோதனை செய்ததில் கையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரிகளை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகன் ஸ்ரீ வெங்கட பிரசாத் (20) மற்றும் திருவெண்ணெய்நல்லூர் பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்த குமரன் என்பவரின் மகன் பீமாராவ் (21) என தெரிய வந்தது இவர்களிடம் இருந்து சுமார் 400 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் பணம் ரூபாய் 6,600 கைப்பற்றப்பட்டு எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
