மதுரை, எஸ்.எஸ் காலனியில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அல்-நூர் பார்வையற்றோர் மதரசா மற்றும் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு மையத்தின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் நிறுவனர் முஸ்தபா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொடர்ந்து சேவைகள் செய்து வரும் ஆசிரியரும் சமூக ஆர்வலருமான நூருல்லாஹ் கலந்து கொண்டு 200 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் உணவும் வழங்கினார்.
அறக்கட்டளை பயனாளர் நன்றி கூறினார். மேலும் நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர் சின்னத்தம்பி
