திருநெல்வேலி,நவ.30:- “தமிழின வேந்தர்” பெ.ஜான் பாண்டியனின், பிறந்தநாளை முன்னிட்டு, தங்க மோதிரம், பரிசு பெட்டகம் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி, இன்று ( நவம்பர்.30) திருநெல்வேலியில், நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியில் உள்ள, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இன்று (நவம்பர்.30) பிறந்த குழந்தைகளுக்கு, “தங்க மோதிரம்” மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அடங்கிய “பரிசு பெட்டகம்” ஆகியவற்றை, கண்மணிமாவீரன் வேளாளர் தலைமையில்,
மாநில இளைஞர் அணி தலைவர் ஜா.வியங்கோ பாண்டியன் வழங்கி, குழந்தைகளை வாழ்த்தினார்.

தொடர்ந்து, மனக்காவலம் பிள்ளை நகரில், ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேருக்கு, “அன்னதானம்” வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகர பகுதிகளில், கட்சி கொடிகள் ஏற்றப்பட்டு, பொது மக்களுக்கு “இனிப்புகள்” மற்றும் “மரக்கன்றுகள்” வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும்,
மாநில கொள்கை பரப்பு செயலாளர் கோபால கிருஷ்ணன், நெல்லை வீரவ நல்லூர் “மயோபதி” இயன்முறை மருத்துவமனை, முதன்மை மருத்துவர் டாக்டர் ராமசாமி, தலைமை நிலைய செயலாளர் “கல்குறிச்சி” சேகர், சென்னை மண்டல செயலாளர்கள் ராஜேந்திர பிரசாத், சுப்பு லெட்சுமி, மாவட்ட இணை செயலாளர் சின்ன துரை பாண்டியன், மாவட்ட இளைஞரணி தலைவர் மணிமாறன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சண்முக ராஜ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பொன் முருகன், மகளிர் அணி கண்மணி ஷர்மிளா, கண்மணி லலிதா, மணி கண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
