தென்காசி நவம்பர் 24
தென்காசி அருகே உள்ள கடையநல்லூர் அடுத்துள்ள இடைகால் அருகே இன்று காலை 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு காவல்துறை விரைந்து விசாரணை நடத்தி வருகிறது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே தென்காசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்ற தனியார் பேருந்தும், கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தும் இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஆறு பேர் உயிரிழந்தனர்.
இரு தனியார் பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டதோடு, காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் இறந்தவர்களின் விபரம் பின்வருமாறு. வனராஜ் வயது (36) 4 வது விநாயகர் கோயில் தெரு, புதுக்குடி தென்காசி 2 . தேன்மொழி வயது (55) புளியம்புக்கு தெரு கடையநல்லூர் 3. மல்லிகா வயது (55) புளியங்குடி மேலும் அடையாளம் தெரியாத பெண் வயது 30 மற்றும் ஒரு பெண் வயது 30 50 வயதுடைய மற்றும் ஒரு பெண் படுகாயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோரில் 5 பேர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது விபத்தில் ஈடுபட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏகே கமல் கிஷோர் அதன் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளார் தனியார் வாகனங்கள் மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தை குறைப்பதில்லை என்றும் நேரத்தை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தனியார் பேருந்துகள் ரேசில் ஈடுபடுவதாகவும் இதுபோல சம்பவம் ஈனா விளக்கு பகுதியில் ஏற்பட்டபோது இரு நபர்களும் ஒரு குழந்தையும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் வாகனத்தில் வேகக் கட்டுப்பாட்டு கருவியை நிரந்தரமாக வேண்டும் என்றும் பாதிக்கப்படுபவர்கள் சாதாரண பாமர மக்கள் என்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்களும் பாதிக்கப்பட்ட பயணிகள் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளார் தென்காசி அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட நபர்களை தென்காசி ஒன்றிய குழு பெருந்தலைவர் ஷேக் அப்துல்லா மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி தலைவி பேபி பேபி ரஜப் பாத்திமா மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பூங்கொடி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராகிம்
