நாகர்கோவில்; நவ.20
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் குருசடி புனித அந்தோனியார் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ–மாணவியருக்கான இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடை பெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா கலந்து கொண்டு மாணவ, மாணவியருக்கு மிதிவண்டிகளை வழங்கினார். இதன் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதில் ஏற்படும் சிரமம் குறைக்கப்பட்டு, கல்வியில் மேலும் முன்னேற்றம் பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.
தலைமையாசிரியர் அருட்சகோதரி பேரின்பாபாய், ஆசிரியர்கள், பள்ளி மாணவ–மாணவிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தமிழக விடியல் குமரி மாவட்ட நிருபர் பாவலர் ரியாஸ்.
