Headlines

புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

புதுச்சேரியில் இருந்து காரில் 480 மதுபான பாட்டில்கள் கடத்தி வந்த இருவர் கைது. கார் மற்றும் 180 ml அளவு கொண்ட 480 பாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.சரவணன் IPS., அவர்களின் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.கந்தசாமி அவர்களின் மேற்பார்வையில் விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் திருமதி.சுஜாதா மற்றும் காவலர்கள் தலைமையில் கெங்கராம்பாளையம் சோதனை சாவடி அருகே வாகனத் தணிக்கையில் இருந்தபோது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவது தெரியவந்து கார் மற்றும் எதிரிகளை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் சுகுந்தன் வயது 24 மற்றும் கடவுள் என்பவரின் மகன் தீபக் வயது 20 என தெரிய வந்தது. மேலும் இவர்கள் புதுச்சேரியிலிருந்து விற்பனைக்காக மதுபானங்கள் எடுத்து செல்வது தெரியவர எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்து கார் மற்றும் புதுச்சேரி மதுபானங்கள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *