உடுமலை நவம்பர் 01.
ஊருக்கு நடுவில் சுகாதாரகேடு ஏற்படுத்திவரும் கோழிப்பன்னையை
அகற்ற கோரி வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆர்பாட்டம். தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் எச்சரிக்கை திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குப்பம்பாளையம் ஊராட்சிகுட்பட்ட வெள்ளை செட்டிபாளையத்தில் அம்மன் பார்ம்ஸ் என்ற தனியார் கோழிப்பன்னை செயல்பட்டு வருகிறது

ஊருக்கு நடுவே செயல்பட்டுவரும் இந்த கோழிப்பன்னையால் ஊர் முழுதும் துர்நாற்றமும் ஈக்கள் தொந்தரவும் அதிகரித்து வருவதோடு ஊர் மக்கள் அடிக்கடி நோய் வாய்ப்படுவதும் வாடிக்கையாகி வந்துள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வரிடம் நேரடியாகவும் அதிகாரிகளிடம் புகார்மனுக்களாகவும் கொடுத்த பொதுமக்கள் கொடுத்திருந்த நிலையில் சுகாதாரதுறையினர் ஆய்வு செய்து பன்னையாள் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் கோழிப்பன்னையை வேறு இடத்திற்கு மாற்றிகொள்ளவும் அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.

இருப்பினும் இதுவரை கோழிப்பன்னை அங்கேயே செயல்பட்டுவருவதால் ஊரெங்கும் கருப்புகொடி கட்டி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் சிறப்பு கிராமசபை கூட்டத்தையும் புறக்கணித்து ஊராட்சி அலுவலகத்திலே அமர்ந்து தர்ணா போராட்ட்திலும் ஈடுபட்டனர்.
உரிய தீர்வு கிடைக்கவில்லையெனில் தேர்தலை புறக்கணிக்கபோவதாக் எச்சரித்த அவர்கள் கோழிப்பண்ணை அருகில் தொடர் காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்து வருகின்றனர்..
