அக்டோபர் 10 : உடுமலை
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பில் கோவை மண்டல அளவிலான ஹாக்கி அணிக்கான தேர்வு போட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் பெதப்பம் பற்றிய அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இளையோர் பிரிவில் ராஜேஷ். தீனா.
ஆகியோர் மற்றும் மூத்தோர் பிரிவில் கௌதம். மிகவும் மூத்தோர் பிரிவில் யோகேஸ்வரன், திவாகர் .பொன்ராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சிவகங்கை அரியலூர் விழுப்புரம் ஆகிய இடங்களில் நடைபெறும் மாநில தேர்வு போட்டியில் விளையாட உள்ளனர் இந்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பாபு உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் வேல் பள்ளி மேலாண்மை குழுவினர் ஆசிரியர்கள் பாராட்டினர்.
