கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி என் எல் சி பொது மருத்துவமனையில் தலைமை நர்ஸ்சாக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 19 பவுன் நகை மற்றும் 5 வெள்ளி கொலுசு, கேமரா,ரூ 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்றனர்.
அதன் மதிப்பு ரூ 15லட்சம் இருக்கும். இது குறித்து நெய்வேலி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
பண்ருட்டி செய்தியாளர் – R. விக்னேஷ்.
