செப் 27, கன்னியாகுமரி-
குமரி மாவட்டம் யுனைடெட் லயன்ஸ் கிரிக்கெட் அணியின் ஆறாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, கிரிக்கெட் போட்டிகள் இன்று காலை இடலாகுடி F.L.T மைதானத்தில் தொடங்கின.
தொடக்க நிகழ்ச்சியை நாகர்கோவில் மாநகராட்சி முப்பதொன்பதாவது வார்டின் திமுக வட்ட செயலாளர் இடலை செய்யது தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சைய்ரா கேட்டர்ஸ் உரிமையாளர் ஃரவுப் மற்றும் யுனைடெட் லயன்ஸ் கிரிக்கெட் அணியின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கேமராமேன் – ஜெனீருடன்., குமரி மாவட்ட தமிழக விடியல் நிருபர் – பாவலர் ரியாஸ்.
