செப் 25 கன்னியாகுமரி :-
கன்னியாகுமரி மாவட்டம் வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் வழக்கறிஞர் ரகு, தனது நான்கு சக்கர வாகனத்தை முறையற்ற அனுமதி இன்றி நிற மாற்றம் செய்தும் வாகனம் முழுவதும் கட்சியின் கொடி, வாசகங்கள் மற்றும் கட்சி தலைவர் விஜயின் புகைப்படங்களால் நிரப்பியும் போக்குவரத்து விதிகளுக்கு எதிராக மாற்றி இருப்பது பேசு பொருளாக ஆகி உள்ளது.

போக்குவரத்து துறை கண்டும் காணாமல் இருக்கிறதா?
பொதுமக்களுக்கு ஒரு நியாயம், அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயமா? என கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்.
மேலும் அந்த நான்கு சக்கர வாகனத்தின் காப்பீடு மற்றும் மாசு சான்றிதழ் காலாவதி ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
கேமராமேன் ஜெனீருடன் குமரி மாவட்ட செய்தியாளர் – பாவலர் ரியாஸ்.
