Headlines

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் அதிர்ச்சி சம்பவம்

செப் 16, கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ஊழியரின் ஏமாற்றால் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குலசேகரத்தைச் சேர்ந்த ரமணி (35) என்பவர், தனது கணவர் அஜிகுமார் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்ததால், குடும்பத்தை நடத்துவதற்காக அரசுப் பணியில் நியமனம் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

அப்போது அங்கு ஆர்.ஐ. ஆக பணியாற்றிய வேல்முருகன், ரமணியிடம் தனது திருமணம் நடைபெறும் என நம்பிக்கை அளித்து, பணி தொடர்பான உதவியும் செய்வதாகக் கூறியதாக தெரிகிறது. இதற்காக அவர் ரமணியிடம் இருந்து நகை மற்றும் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆனால் பின்னர் வேல்முருகன், ரமணியுடன் திருமணம் செய்வதாகக் கூறிய வாக்குறுதியை மீறி வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் மன உளைச்சலுக்குள்ளான ரமணி, தன் வாழ்க்கை நொறுங்கிவிட்டதாகக் குறிப்பிட்டு ஒரு உருக்கமான கடிதத்தை எழுதி விட்டு, தனது சிறுமையை தவிக்கவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குலசேகரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரமணியின் மரணம் குறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

தன் கணவர் மறைவுக்குப் பிறகு குழந்தையை வளர்க்க போராடிய நிலையில், அரசு வேலை மற்றும் வாழ்க்கை தொடர்பாக நம்பிக்கை வைத்தவரால் ஏமாற்றப்பட்டு உயிரை மாய்த்துக்கொண்ட ரமணியின் சம்பவம் சமூகத்தில் ஆழ்ந்த வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்ட செய்தியாளர் பாவலர் ரியாஸ்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *