செப் 9 கன்னியாகுமரி
கண்ணாடி கீறல் சம்பவம் – அரசுக்கு கண்டனம் கன்னியாகுமரி கடல் நடுவே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டு பாலத்தில் கண்ணாடி கீறல் ஏற்பட்டதை தொடர்ந்து, அதிமுக எம்எல்ஏ திரு. எண். தளவாய் சுந்தரம் அவர்கள் அரசின் அலட்சியத்தை கண்டித்து, பொதுமக்களுக்கு ஏற்பட்ட அச்சத்தை போக்க தவறியதற்காக கடும் கண்டனம் தெரிவித்தார்.
நேரில் ஆய்வு மேற்கொண்ட தளவாய் சுந்தரம் பராமரிப்பு பணிகளின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததை அடுத்து, தளவாய் சுந்தரம் அவர்கள் கழக நிர்வாகிகளுடன் படகில் சென்று கண்ணாடிக் கூண்டு பாலத்தை நேரில் ஆய்வு செய்தார்.
அரசுக்கு வலியுறுத்திய கோரிக்கைகள் சுற்றுலா பயணிகளுக்கு அச்சம் ஏற்படாமல் உடனடியாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கண்ணாடிக் கூண்டு பாலத்திற்கான மாதாந்திர பராமரிப்பு செலவு ரூ.63 ஆயிரம் என்பதைக் கூடுதலாக உயர்த்த வேண்டும்.
பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
சேதமடைந்த கண்ணாடி மாற்றம் தற்போது கீறல் ஏற்பட்ட கண்ணாடி மாற்றப்பட்டு புதிய கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றும் எம்எல்ஏ தளவாய் சுந்தரம் வலியுறுத்தினார்.
கன்னியாகுமரி நகர நிருபர் செய்லிஸ்
