கன்னியாகுமரி :
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியின் மையப்பகுதியான செட்டிகுளம் சந்திப்பு PWD ரோட்டில் கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணிகள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு, ஓடையை சீரமைக்கும் பெயரில் சிலாப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் பின்னர் எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் கழிவுநீர் ஓடை திறந்த நிலையில் கிடப்பதால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், காங்கிரீட் கம்பிகள் முறையாக அகற்றப்படாததால் உயிரிழப்பு ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
இதனுடன், சாலையின் நடுவே சென்டர் மீடியன் கற்கள் வைக்கப்பட்டிருப்பதால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் உண்டாகிறது.
இதனால் ஓரமாக செல்லும் வாகனங்கள் திறந்த கழிவுநீர் ஓடையில் விழும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
உயிர்பலி ஏற்படும் முன் மாநகராட்சி நிர்வாகம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்ட செய்தியாளர் : பாவலர் ரியாஸ்.
