ஆக்.27, கன்னியாகுமரி :
நாகர்கோவிலில் வண்ணான்விளை பகுதியில் உள்ள மர வியாபார கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
ஆன்றனி கிஷோர் என்பவர் கடந்த ஆறு ஆண்டுகளாக மர வியாபார கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு இவரது கடையில் ரூ.20 லட்சம் மதிப்பிலான தேக்கு மரங்கள், ஸ்விட்ச் போர்டுகள் மற்றும் மின் மோட்டார் சாதனங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக ஆன்றனி கிஷோர் புகார் அளித்ததை அடுத்து சுசீந்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
