கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சிறப்புவிழாவில், அம்மாண்டிவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி கற்ற மாணவர் ஒருவர், “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (IIIT) யில் உயர்கல்வி தொடர உள்ளார்.
இந்த மாணவரை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா அவர்கள் அவருக்கு மடிக்கணினி வழங்கி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்வில் கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் பலரும் பங்கேற்றனர்.
— பாவலர் ரியாஸ்
குமரி மாவட்ட செய்தியாளர்
