அக். 25, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் முழு கொள்ளளவான 46 அடியை எட்டியுள்ள நிலையில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார் கலெக்டர் எம்.எஸ். பிரசாந்த் உடன் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வில் வெள்ளாறு வடி நிலக்கோட்ட பொறியாளர் அருணகிரி, உதவி செயற்பொறியாளர் மோகன், உதவி பொறியாளர்கள் விஜயகுமார், பிரபு, மாதவன், பிரசாத், மற்றும் பாசன சங்கத் தலைவர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். புதிய பாசனம் மூலம் வடக்கனந்தல் மாத்தூர் மண்மலை மாதவ சேரி பால்ராம்பட்டு செல்லம்பட்டு கரடி சித்தூர் உள்ளிட்ட 40 கிராமங்கள் பயன்படும்.