கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மரவள்ளி கிழங்கு கொள்முதல் விலையை குறைத்து இருப்பதை கண்டித்தும், மரவள்ளி கிழங்குக்கு நியாயமான விலை கிடைத்திடவும், கள்ளக்குறிச்சியில் சேகோ பேக்டரி அமைத்து தரக்கோரியும் மனு அளித்தனர். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு பாயிண்ட்டுக்கு ரூபாய் 350 முதல் 400 வரை நிர்ணயிக்கப்பட்டு, ஒரு டன் கிடங்கு கொள்முதல் பத்தாயிரம் முதல் 12 ஆயிரம் வரை பெற்று வந்தனர் . இந்த நிலையில் தற்போது ஒரு பாயின்டின் விலை 280 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ஒரு டன்னுக்கு ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது.
கடந்த காலங்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை, மற்றும் உற்பத்தி செலவு ,ஆள் கூலி இவைகள் எல்லாம் போக விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை ஏற்றம் மற்றும் ஆள் கூலி இவைகள் அதிகமாக இருப்பதால் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்படுகிறது.
எனவே விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் , சேகோ ஆலை நிர்வாகம் இணைந்து கமிட்டி அமைத்து மரவள்ளி கிழங்கிற்கு நியாயமான விலை கிடைத்திட ஆவண செய்யுமாறு கூட்டமைப்பு தலைவர் ஜெயபிரகாஷ் தனது மனுவில் கூறியுள்ளார் .
இந்தியாவின் முதுகெலும்பு என்று கூறினார் காந்தியடிகள். ஆனால் விவசாயிகள் அனைவரும் முதுகெலும்பு இல்லாதவர்களாக கூனி குருகி நிற்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.