இந்திய அஞ்சல் துறை சார்பில் தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பரிசு வழங்கப் படுகிறது.
எழுதுவதின் மகிழ்வு: டிஜிட்டல் யுகத்தில் கடிதங்களின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய ஏதாவது ஒரு மொழியில் கடிதத்தை எழுதலாம்.
கடிதங்கள் 18 வயதுக்குட்பட்ட நபர்கள் , 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படும்.
ஆயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் Rs 5/- மதிப்பிட்ட அஞ்சல் உறையிலும் அல்லது ஐநூறு வார்த்தைகளுக்கு மிகாமல் Inland Letter Cover-லும் எழுதி “The Chief Postmaster General, Tamilnadu,Chennai-600002” என்ற முகவரிக்கு வருகின்ற டிசம்பர் 14-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
இரண்டு விதமான கடிதங்கள் கைப்பட எழுதியவையாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான நிபந்தனை
மாநில அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக Rs.25000/-ம், இரண்டாம் பரிசாக Rs.10000/-ம்,மூன்றாம் பரிசாக Rs.5000-ம் வழங்கப்படும்.
தேசிய அளவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக Rs.50000/-ம், இரண்டாம் பரிசாக Rs.25000/-ம்,மூன்றாம் பரிசாக Rs.10000-ம் வழங்கப்படும்.
14.12.2024 க்கு பின்னர் அனுப்பும் கடிதம் ஏற்றுகொள்ள படமாட்டாது.
V.பரமசிவம்
அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர்
திண்டுக்கல் அஞ்சல் கோட்டம்
திண்டுக்கல்- 624001