உடுமலை
நவம்பர் 15.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் தர்னேஷ்(18).இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் தர்னேஷ் உடன்படிக்கும் மாணவி ஜீவிதா(18) என்பவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு பொள்ளாச்சி-உடுமலை சாலையில் பழனிக்கு வந்து கொண்டிருந்தார்.

இவரது வாகனம் அந்தியூர் பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிர்பாராத விதமாக எதிராக வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேராக மோதியது.

இதனால் நிலைகுலைந்த தர்னேஷ் மற்றும் ஜீவிதா சாலையில் சரிந்தனர். அப்போது டிராக்டர் ஜீவிதா மீது ஏறி இறங்கியது., இந்த விபத்தில் அவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
அதே போன்று மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த பொள்ளாச்சி தனியார் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராகல் பாவியை சேர்ந்த பாண்டீஸ்வரன்(19) பழனியை சேர்ந்த விக்னேஷ்(18) கண்ணமநாயக்கனூரை சேர்ந்த நஜீப்(18) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்த நபர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்., அங்கு டாக்டர்கள் அனைவரையும் சிகிச்சைக்கு உட்படுத்தினார்கள்.
அதில் கல்லூரி மாணவி ஜீவிதா ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்தது.
மற்ற நபர்கள் முதல் உதவி சிகிச்சைக்கு பின்பு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து உடுமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்., கல்லூரி மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
