உடுமலை
நவம்பர் 13.
உடுமலை அருகே உள்ள மானுப் பட்டியில் உள்ள அகரம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் விவசாயிகளுக்கு இலவச இயற்கை விவசாயம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதில் காங்கேயம் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் இருந்து அட்மா திட்டத்தின் கீழ் காங்கேயம் மற்றும் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் பாலகுமார் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மதுஸ்ரீ,சுகன்யா, ஆகியோர் பயிற்சி வழங்கினார்கள்.
அப்போது காங்கேயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வசந்த ராணி அப்துல் கலாம் ஆகியோர் உடன் இருந்தனர்.
