திருநெல்வேலி,நவ.13:-
தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள், பலப்படுத்தப்பட்டு உள்ளன. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி மாவட்டத்தில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர்” நை.சிலம்பரசன் உத்தரவின் பேரில், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள், மாவட்ட காவல் துறையினரால், மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் அதிகம் கூடுகின்ற வழிபாட்டுத்தலங்கள், தினசரி சந்தைகள், எப்பொழுதுமே பரபரப்பாக இயங்கும் கடைவீதிகள்,பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள்- என அனைத்து இடங்களிலும், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாதவாறு, மாவட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில், 24 மணிநேரமும் பாதுகாப்பு பணிகளில், தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக, இன்று (நவம்பர்.13) மாவட்டத்தில் உள்ள அனைத்து, உட்கோட்ட காவல் பகுதிகளிலும், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், முக்கிய வீதிகள்,கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள இடங்கள், மருத்துவமனை அமைந்துள்ள வ இடங்கள், கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் அமைந்துள்ள இடங்கள் ஆகியவற்றில், “மோப்ப நாய்களின் படைகள்” மற்றும் “வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் படைகள்” ஆகியவற்றை கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீவிர சோதனையில் மாவட்ட காவல்துறையினர், ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்ட செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
