உடுமலை
நவம்பர் 11.
உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள லெப்டினன்ட் சுபாஷ்,ரேணுகாதேவி அறக்கட்டளை வளாகத்தில் நிறுவனர் கே ஆர் எஸ் செல்வராஜ் வழிகாட்டுதலின்படி காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு அரசு தேர்வுகள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு மற்றும் பெண்களுக்கான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது அவரது நினைவில் வாழும் துணைவியார் ரேணுகாதேவி பிறந்தநாளை ஒட்டி பெண்களுக்கான தன்னம்பிக்கை வாரம் அறக்கட்டளை சார்பில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் கே.ஆர்.எஸ் செல்வராஜ் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் பிரபாகரன், இன்ஜினியர் பாலமுருகன் பயிற்சியாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.

நிகழ்ச்சியில் பெண்களுக்கான சிறப்பு தொழில் வழிகாட்டுதல் முகாம் நடந்தது. தற்போது அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு இலவசமாக தையல், ஆரி,அழகுகலை நிபுணத்துவம் ,ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் பயிற்சி பெற்று வருபவர்களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கான உதவிகள் மற்றும் சிறப்பு வழிகாட்டுதல் முகாம் நடந்தது.
இதில் திருப்பூர் மாவட்ட தொழில் முனைவோர் மாவட்ட கருத்தாளர் ம. மணிவாசகம் கலந்து கொண்டு அரசின் மூலம் தொழில் தொடங்குவதற்கான கடன் உதவிகள் பெறுவது குறித்த வழிமுறைகளை தெரிவித்தார்.

உடுமலை தனலட்சுமி பேங்க் முது நிலை மேலாளர் டி.வி ராகேஷ் கலந்துகொண்டு வங்கி மூலம் வங்கி கடன் எவ்வாறு வழங்கப்படுகிறது. அதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
தொடர்ந்து பெண்கள் கலந்து கொண்ட கருத்தரங்கமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில்500 க்கும் மேற்பட்டபெண்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரிச்சர்ட் செய்திருந்தார்.
