உடுமலை
நவம்பர் 09.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு ஊராட்சிக்கு உட்பட்ட உடுமலை – தாராபுரம் செல்லும் சாலையோரத்தில் ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி தேக்கி வைத்துள்ளது.
ஊராட்சி பகுதி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளை ராஜவாய்க்கால் அருகில் உள்ள பிரதான சாலையோரத்தில் கொட்டி தேக்கி வைக்கின்றனர்.
சாலையோரம் கொட்டும் குப்பைகளால் மழை காலங்களில் அதிக துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவியுள்ளது.
தேக்கி வைத்துள்ள குப்பைகளில் உள்ள கழிவுகளை திண்பதற்காக வரும் தெரு நாய்களால் சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது.

குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை குடிலுக்கு கொண்டு செல்லாமல் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களிலும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலும் துப்புரவு பணியாளர்கள் கொட்டி வருகின்றனர்.

இதனால் மக்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர். காரத்தொழுவு ஊராட்சி அருகில் சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தவிர்த்து திடக் கழிவு மேலாண்மை குடில்கள் அமைத்து அங்கு எடுத்து சென்று குப்பைகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
